நீதிமன்றம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு: பாகிஸ்தானில் 7 பேர் உயிரிழப்பு!
Thursday, February 23rd, 2017
பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே நேற்று காலை இடம்பெற்ற இரட்டைகுண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள சர்ச்சட்டா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஜமாத் உல் அஹ்ரர் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
நீதிமன்ற வாசலிலேயே தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், உயிரிழப்புகள் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts:
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் விவாதம்!
தென் சீனக்கடல் சர்ச்சை: டிரம்ப் நிர்வாகத்துடன் மோத தயாராகின்றது சீனா!
ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றி - சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறை!
|
|
|


