வசீம் தாஜூதீன் வழக்கு – சுமித் பெரேராவுக்கு பிணையில்!
Friday, February 17th, 2017
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
றக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், முதலாம் சந்தேக நபரான சுமித் பெரேரா இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts:
உள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு!
பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
முதல் 10 ஓவர்கள் முடிவில் அரசாங்கத்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன - சம்பிக்க ரணவக்க!
|
|
|


