2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம் – சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி மார்ச் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!
Monday, February 19th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
முன்பதாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16.2.2024) நிறைவடைந்தது.
அதன்படி, புதிய பாடசாலை தவணைக்கான முதல் கட்டம் இன்று (19.2.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் புதிய கல்வி ஆண்டிற்கான பாடசாலை சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
அதன்படி அவற்றை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புகையிரதம் மோதி இளைஞர் பலி!
கடந்த 5 ஆண்டுகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 5, 677 உந்துருளி செலுத்துநர்கள் பலி
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத காணிகளில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை - விவசாயிகளுக்கு நிதி...
|
|
|


