வடக்கிற்கு வருகின்றார் சுகாதார அமைச்சர்!
Friday, February 17th, 2017
மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின எதிர்வரும் மார்ச் மாதம் 2ம், 3ம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் வடக்கின் நிலைமையை பார்வையிடுவதோடு பல்வேறு சுகாதார நலசெயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வடக்கின் சுகாதாரத்துறை அபிவிருத்தி தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளோடு கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தமிழரசுக் கட்சி அலுவலகம் முற்றுகை!
பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் - வடக்கு மாகாண ஆளுநர் ...
2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதி...
|
|
|


