யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் விபத்து: நால்வர் படுகாயம் !

Tuesday, February 14th, 2017

யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஹயஸ் வானும்,  சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இன்று திங்கட்கிழமை(13) நண்பகல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த சாரதி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் ஹயஸ் வான் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற நிலையில் நாவலர் வீதியிலிருந்து ஏ-9 வீதியை நோக்கிப்  பயணித்த சுற்றுலாப் பயணிகளின் வாகனம் சந்தியைக் கடக்க முற்பட்ட போது இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற ஹயஸ் வானின் சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106