விரைவில் முச்சக்கர வண்டிகள் தொடர்பான ஒழுங்குமுறை அறிக்கை!
Monday, February 13th, 2017
முச்சக்கர வண்டி விதிமுறைகள் தொடர்பிலான இலங்கை தர நிர்ணய பணியக வரையறை பற்றிய அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
மேலும், முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்படும் மீற்றர் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என, இதன் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், அதன் தலைவர் சிசிர கோதாகொட கூறியுள்ளார்.
மக்களுக்கு மிகச் சிறந்த தரமான முச்சக்கர வண்டி சேவைகளை வழங்குவதை நோக்காகக் கொண்டே இந்த வேலைத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி கோர விபத்து - 20 இக்கும் அதிகமானோர்...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இன்று அறிமுகப்படுத்தி வைத்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ச!
அரசியல் அதிகாரம் என்பது தற்காலிகமானது - தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் - அலி சப்ரி!
|
|
|


