அரசியல் நிபந்தனைகள் எதவும் இன்றி இலங்கைக்கு ஆதரவு – சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனாதிபதி ரணிலிடம் தெரிவிப்பு!
Friday, October 20th, 2023
அரசியல் நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கைக்கான உதவிகளை வழங்கவும், ஏற்றுமதியை அதிகளவில் கொள்வனவு செய்யவும் சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் இன்று பீஜிங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில், பிராந்திய விவகாரங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சர்வதேச வைத்தியர்கள் மாநாடு ஆரம்பம்!
தொழில் புரியச்சென்று வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்கள் - பாதுகாப்பு சேவையில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் சேவையி...
|
|
|


