வெளிநாட்டு பணி தொடர்பில் விசேட சட்ட நடவடிக்கை – அமைச்சர் தலதா அதுகோரள!
Saturday, February 11th, 2017
வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும் பணிப் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பில் மோசடியான அறிக்கையை வெளியிடும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வொன்றில் உரையாற்றியபோது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள இதனைத் தெரிவித்துள்ளார்.
5 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா என்பது தொடர்பில் உறுதிப்பத்திரம் வழங்க 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உள்ளனர். இவ்வாறான 25 முதல் 30 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான அதிகாரிகளுக்கு தமது அமைச்சில் இடமில்லை என அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

Related posts:
எச்சரிக்கை... வெள்ளத்தில் விளையாடிய இரு சிறுவர்கள் பலி: வத்தளையில் சோகம்!
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு வாக்குரிமை - வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர்!
பொதுமக்கள் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாது செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தம...
|
|
|
பணியாற்றும் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் ஊழியர்கள் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் - தொழில் அமைச்...
இலங்கையில் 3 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா - 7 ஆயிரத்து 366 பேர் மரணம் – சுகாதார அமைச்சு தெரிவ...
வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்தி பிரதேசத்தின் நலன்களை வலுப்படுத்த வலி மேற்கு பிரதேச ச...


