உலக வரிசையில் மூன்றாம் இடத்திற்கு வந்த இலங்கை!
Saturday, February 11th, 2017
வரைவை வலுப்படுத்திய நாடுகள் இடையில் உலகில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளதாக கனேடிய அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் உரிமையானது உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை உயர்மட்டத்தில் இருப்பதாக கனேடிய சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தரப்படுத்தலில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரப்படுத்தலுக்கு அமைய மெக்சிகோ 136 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சேர்பியா 135 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை 131 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்தியா 128 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

Related posts:
வெளிநாட்டவர்கள் விரும்பி பருகும் தேனீரை அன்றும் இன்றும் வழங்குபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் - அமை...
கடனுக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா நிபந்தனையை முன்வைக்கவில்லை - அமைச்சர் டலஸ் ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – நட்டஈட்டைப் பெற சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு - அம...
|
|
|


