வெளிநாட்டவர்கள் விரும்பி பருகும் தேனீரை அன்றும் இன்றும் வழங்குபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பெருமிதம்!

Tuesday, March 22nd, 2016

வெளிநாட்டவர்கள் விரும்பதக்க தேனீரை பருகுவதற்காக தேயிலை தொழிலை மேற்கொண்டு இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வித்திட்டவர்கள் தோட்ட தொழிலாளர்கள். காலம் காலமாக தோட்ட தொழிலை மேற்கொண்ட இவர்கள் ஆடை தொழிற்சாலை தொழில்கள் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்களை செய்து தமது வியர்வையை சிந்திய தொழிலாளர்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கான பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக செயல்பட்டு வருகின்றனர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது –

உலக மகளிர் தினத்தை ஞாபகப்படுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கும் இந்த மாபெரும் மகளிர் தின விழா மறைந்த அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்கட்சியில் அமராது தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி ஆளுங்கட்சியில் அங்கமாக விளங்கி சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரண ஒரு அமைப்பு அல்ல. பல்வேறு வரலாற்றுகளை கொண்ட அமைப்பாகும். இதை யாரும் மறந்து விட கூடாது. அதை வேலை அழித்து விடவும் முடியாது. இவ்விடத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தித்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இருக்கின்றார். இவரை இப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும்.

இவரின் கூடாக வியர்வை சிந்தும் மலையக தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் எடுத்துக்கூறி உரிமைகளை பெறும் வாய்ப்பு உள்ளதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரில் ஒருவரான நான் பெருமையடைகின்றேன் என தனது உரையில் தெரிவித்தார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106