நீர்த்தொட்டியில் வீழ்ந்து10 வயது சிறுவன் பலி!
Monday, February 6th, 2017
யாழ் கீரிமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை காணாமல் போன 10 வயது சிறுவன் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து தனது பாட்டியின் வீட்டிற்கு சென்ற கஜேந்திரகுமார் கஜீபன் என்ற சிறுவனே இவ்வாறு பாழடைந்த தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வாகனங்களை சுத்தரிகரிப்பதற்கு அமைக்கப்பட்ட குறித்த நீர் தொட்டியானது, தற்போது பாவனையில் இல்லாத நிலையில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts:
மூன்று உணவு வகைகள் விலைகள் உயர்வு!
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மகிழ்ச்சியளிக்கின்றது - கிளி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவி...
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ...
|
|
|


