திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை பதிவு !
Monday, February 6th, 2017
2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையிலேயே இந்த வருடத்திறகான தேர்தல்கள் அனைத்தும் நடைபெறும் என்றும் ஆகக்குறைந்த வாக்காளர் எண்ணிக்கைப் பதிவு திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 இலட்சத்து 11 ஆயிரத்து 964 ஆகும். 2015 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புடன் ஒப்பிடுகையில் இத்தொகை ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 759 இனால் அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பிற்கு அமைய ஆகக்கூடுதலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தொகை 17இலட்சத்து 50 ஆயிரத்து 310 ஆகும். இரண்டாவது இடமாக கொழும்பு மாவட்டம் இடம்பெற்றுள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 43 ஆயிரத்து 713 ஆகும்.
ஆகக்குறைந்த வாக்காளர் எண்ணிக்கை பதிவு திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. இங்கு இரண்டு இலட்சத்து 68 ஆயிரத்து 96 பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர். வன்னி மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 69 ஆயிரத்து 115 ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106