நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைப்புச் செய்யப்படவுள்ள 22 வீதிகள்
Sunday, February 5th, 2017
யாழ். நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த வருடம் சபையின் நிதியில் 22 வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகப் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார். 29.674 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதிகளின் புனரமைப்பு வேலைகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி, கொக்குவில் பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை, கொக்குவில் மேற்கு நாகலிங்கம் வீதி, கொக்குவில் தபாற்கந்தோர் வீதி முன் ஒழுங்கை, ஜே- 124 நந்தினி பேக்கரி முன் வீதி, ஜே-121 சரஸ்வதி மில் முன் ஒழுங்கை, கலட்டி 3 ஆம் ஒழுங்கை, ஜே-119 கோண்டாவில் கோகுல வீதி, உதயபுரம் 7 ஆம் குறுக்கு வீதி, 15 ஆம் குறுக்கு வீதிகள், ராஜவீதி, முத்தட்டு மட இரண்டாம் வீதியின் கிழக்கே போகும் ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு பாடசாலை வீதியின் குறுக்கு ஒழுங்கை, கலட்டி முந்தல் வீதி, கோண்டாவில் கிழக்கு நாராயணன் வீதி, இராமலிங்கம் வீதியின் வலது பக்க முதலாம் ஒழுங்கை, குளப்பிட்டி சேர்ச் வீதி, திருநெல்வேலி முருகன் வீதியின் முதலாம் ஒழுங்கை, திருநெல்வேலி கேணியடி முன் ஒழுங்கை, பூநாறி வீதியின் வாய்க்கால் கரை ஒழுங்கை, வன்னியசிங்கம் வீதி, ஆனைவிழுந்தான் வீதி, ஆடியபாதம் வீதியிலிருந்து வரும் செங்குந்தா வீதி, பிரம்படி லேன் குறுக்கு ஒழுங்கை, ஆகிய வீதிகளே புனரமைக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106