தொல்பொருட் சின்னங்கள் வவுனியாவில் கண்டுபிடிப்பு!
Saturday, February 4th, 2017
வவுனியா – மஹா கச்சக்கொடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது அநுராதபுரம் யுகத்திற்கான ஆறு தூபி கள் உள்ளிட்ட பல தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இதன்போது சுமார் 50 ஓலைச்சுவடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பொறுப்பதிகாரி புலஸ்திகம சிரிரத்ன தேரர் குறிப்பிட்டார். மேலும், 10 அடி உயரமான சிலைகளும் 110 க்கும் அதிகமான கற்குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வரலாற்று சிறப்புடைய பண்டைக்கால கட்டடங்களும் வவுனியா மஹா கச்சக்கொடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts:
100 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெப்பம்!
வருகின்றது செயற்கை எலும்பு தொழில்நுட்பம் - 10 ஆண்டுகளில் எலும்புப் பிரச்சனைகளுக்கு தீர்வு!கிடைக்க வா...
அப்பிளின் புதிய அறிமுகங்கள்
|
|
|


