இலங்கையில் புதிய இன நுளம்புகள் பேசாலையில் கண்டுபிடிப்பு!
Tuesday, January 31st, 2017
உலக சுகாதார ஸ்தாபனம் மலேரியாவை அடியோடு ஒழித்துவிட்டதாகக் கூறப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் இணைத்துக் கொண்டுள்ள அதே சமயத்தில் புதிய இன நுளம்புகளை இனங்கண்டுள்ளதாக டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த ரக நுளம்பு மனனார் பேசாலை பகுதியில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மலேரியாவைப் பரப்பும் பிரதான காவியாக இந்த நுளம்பு இருந்து வருவதாகவும், ஆரம்பத்தில் இது வட இந்தியாவிலேயே முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
பின்பு குறுகிய காலத்தில் இந்த இன நுளம்புகள் தென் இந்தியாவுக்கு பரவியுள்ளன என்றும் இலங்கையின் மற்றைய பிராந்திய ங்களுக்கும் இது பரவியிருக்கும் வாய்ப்புகள் உள்ளனவென்றும் சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றார்கள். இந்த இன நுளம்பு களின் முட்டைகள் பேசாலையிலிருந்து கொழும்புக்கு எடுத்துவரப்பட்டு ஆய்வுகூடத்தில் பரிசீலனை செய்யப்பட்டன. இந்திய விஞ்ஞானிகள் உட்பட பலர் கூடி ஆய்வு செய்ததில் இந்தப் புதிய இன நுளம்பு பற்றி அறிய முடிந்துள்ளது. இந்தக் கண்டு பிடிப்பை அடுத்து நாடு முழுவதும் இந்த நுளம்பு பற்றிய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் ஹேரத் மேலும் தெரிவித்தார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106