மறுக்கப்பட்ட காசோலையை வழங்கிய நபரை எச்சரித்த சாவகச்சேரி நீதிமன்று பணத்தை உடன் வழங்கவும் உத்தரவு!
Tuesday, January 31st, 2017
வங்கிக் கணக்கு மூடப்பட்ட நிலையில் மறுக்கப்பட்ட காசோலையை வழங்கிய நபரை கடுமையாக எச்சரிக்கை செய்த சாவகச்சேரி நீதிவான் திருமதி சிறிநிதி நந்தசேகரன், வழங்க வேண்டிய பணமான 1இலட்சத்து 25ஆயிரம் ரூபாவை உரியவருக்கு பணமாக செலுத்துமாறு குற்றவாளிக்கு உத்தரவிட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெதுப்பக உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்திருந்தார். அதற்காக அவர் 1இலட்சத்து 25ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கியுள்ளார். காசோலையாக வழங்கப்பட்ட அந்த வங்கிக் கணக்கு மூடப்பட்டிருந்தமையால் வழங்கிய காசோலை மீளவும் திரும்பியுள்ளது. இது தொடர்பில் பொருள் கொள்வனவு செய்த நபரிடம் பல முறை கேட்டும் அவர் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சாவகச்சேசரி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய காசோலை மோசடியில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். வெள்ளிக்கிழமை வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டிய பணத்தை உடன வழங்குமாறு உத்தரவிட்டதுடன் கடுமையா எச்சரிக்கை செய்தார் நீதிவான்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106