பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்திய சாரதிகளை அழையுங்கள் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
Monday, January 30th, 2017
பேருந்து சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து சாரதிகளை அழைத்து வரப்பட வேண்டும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவிக்கையில்
இலங்கையில் பேருந்து சாரதிகளுக்குப் பற்றாக்குறை காணப்படுகின்றது. பேருந்து சாரதி பற்றாக்குறை தீர்வாக இந்தியச் சாரதிகள் இலங்கையில் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் இது தொடர்பிலான யோசனைத்திட்டம் ஒன்று விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். சாரதிகள் இல்லாத காரணத்தால் சில இடங்களில் வீடுகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Related posts:
வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் !
அரசியல் கைதிகளுக்கான சிறந்த ஆயுதம் தகவலறியும் சட்டமூலம்!
நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் போதிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளது - வ...
|
|
|


