முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!
Sunday, January 29th, 2017
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளினால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது .
போர்ட் எலிசெபெத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் களத்தடுப்பினை தேர்ந்தெடுத்தது .
இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை சார்பில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய குசல் மென்டிஸ் தனது 8 ஆவது அரைச் சதத்தினை பூர்த்தி செய்ததுடன் 62 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்கா சார்பில் வைய்ன் பார்னல் மற்றும் இம்ராம் தாஹிர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். .182 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 34.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
தென்னாபிரிக்கா சார்பில் ஹாசீம் அம்லா மற்றும் குயின்ட்டன் டி கொக் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 71 ஓட்டங்களை பகிர்ந்தனர் .
நிதானமான துடுப்பெடுத்தாடிய குயின்ட்டன் டி கொக் 34 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார் எனினும் ஹாசீம் அம்லா 57 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார்.
தனது 31 ஆவது சர்வதேச அரைச் சதத்தினை பூர்த்தி செய்த ஹாசீம் அம்லா 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் இணைந்த பெப் டூ பிளஸிஸ் மற்றும் வில்லியர்ஸ் ஜோடி தென்னாபிரிக்காவின் வெற்றியினை உறுதி செய்தது.
இதன் அடிப்படையில் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் தொடரில் ஒன்றிற்கு பூச்சியம் என்ற நிலையில் தென்னாரிபிக்க அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106