இணையும் மு.க ஸ்டாலின்- ஓ.பி.எஸ்! அதிர்ச்சியில் மன்னார்குடி!!
Saturday, January 28th, 2017
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் நெருக்கம் காட்டுவது மன்னார்குடி கோஷ்டிக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பி.எஸ் முதல்வரானார்.
அவரை பணி செய்ய விடாமலும், அடுத்த முதல்வராக சசிகலாவை ஆக்குவதையுமே போயஸ் கார்டன் மன்னார்குடி தரப்பு முழு நேர வேலையாக செய்து வருகிறது.
மன்னார்குடி கோஷ்டி முதல்வருக்கு கொடுக்கும் குடைச்சல் குறித்து தமிழக ஆளுநர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் பேசினாராம்.
இதை கருத்தில் கொண்டு தான் சமீபத்தில் சட்டசபையில் பொலிசார் மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலை பற்றி பேசி அரசுக்கு நெருக்கடியை ஸ்டாலின் கொடுக்கவில்லை என கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும், இதுவரை இல்லாத வகையில் குடியரசு தின நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் ஸ்டாலின் பங்கேற்றதும் முதல்வர் ஒ.பி.எஸ்க்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.
மேலும் நேற்று சட்டசபையில் கூட ஓ.பி.எஸ்ஐ ஸ்டாலின் பாராட்டி பேசினார். இதையெல்லாம் பார்க்கும் போது தங்களை எதிர்க்க ஒ.பி.எஸ் ஸ்டாலினுடன் கைகோர்த்துள்ளாரோ என மன்னார்குடி கோஷ்டி கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106