வடகொரியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் Kim Jong-un ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வளர்ச்சியடைந்து வருவது!
Saturday, January 28th, 2017
சர்வாதிகாரி Kim Jong-un ஆளும் வடகொரியாவில் வாழும் மக்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுவது போன்ற விடயங்களிலும் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்ற விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவை ஆளும் Kim மிகவும் கண்டிப்பானவர், மக்களை வாட்டியெடுப்பவர் என்ற பெயர் தான் இதுவரை தெரிந்துள்ளது. ஆனால் அவர் ஆளும் நாட்டின் இன்னொரு முகத்தை Eric Lafforgue என்னும் புகைப்படகலைஞர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
அந்நாட்டு மக்கள் தங்கள் விடுமுறையை அங்கிருக்கும் ஹொட்டல் பார்கள், பீசா ஹட்கள், பூங்காக்கள், கடற்கரைகள் போன்றவற்றில் கழிக்கிறார்கள் என தான் எடுத்த புகைப்படங்களை Eric காட்டுகிறார்.
அவர் கூறுகையில், அமெரிக்காவில் இருப்பது போன்ற அழகான உணவகங்கள் வட கொரியாவிலும் உள்ளது.
இந்த மக்கள் தற்போது அதிகளவு செல்போன் உபயோகப்படுத்துவது, பலவித புதிய உணவுகளை உண்பது, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என நாகரீக கலாசாரத்துக்கு மாறி வருகிறார்கள்.
மேலும், £20 என்ற விலையிலேயே நல்ல சுவையான மற்றும் தரமான உணவுகள் கிடைப்பதாக இவர் கூறுகிறார். வடகொரியாவின் உள்கட்டமைப்பு வசதிகளும் Kim ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வளர்ச்சியடைந்து வருவதாக Eric தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106