உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Saturday, January 28th, 2017

உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும் என யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உருளைக் கிழங்கு செய்கையாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குடாநாட்டில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட உருளைக்கிழங்குச் செய்கை அறுவடை அடுத்த மாத முற்பகுதியில் ஆரம்பிப்பதற்கு செய்கையாளர்கள் தயாராகி வருகின்றனர். அறுவடையின் போது செய்கையாளர்கள் நட்டம் அடையாமல் இருப்பதற்கு அரசு இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் வரியை அதிகரிக்க வேண்டும். இந்த இறக்குமதி வரியை அதிகரிக்காது விடுவதால் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவாhர்கள் ஏற்கனவே இது சம்பந்தமாக யர்.மாவட்டச் செயலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே சமயம் தற்போது பெய்து வரும் பருவப்பெயர்ச்சி மழையால் உருளைக்கிழங்குப் பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்

1435392341500



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106