இந்தியர் மூவருக்கு அவுஸ்திரேலியாவில் சிறப்பு விருது!

Saturday, January 28th, 2017

அவுஸ்திரேலிய நாட்டில் சிறப்பான முறையில் சமூகத்துக்கு தொண்டாற்றி வரும் பொதுமக்களுக்கு ‘ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா’ என்ற விருதும் பதக்கமும் அளிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் 2017-ஆம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா’ என்ற விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.

மருத்துவ துறையில் சிறப்பான சேவை ஆற்றியமைக்காக புருஷோத்தம் சவ்ரிக்கார், நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பிற துறைகளில் சிறப்பாக சேவை செய்துள்ள மக்கான் சிங், அணு மருத்துவ நிபுணரும், சிட்னி நகர தமிழ்ச் சங்க தலைவருமான விஜயகுமார் ஆகியோருக்கு 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா’ என்ற விருதுப் பதக்கம் அளிக்கப்படுகிறது.

மேலும், வடக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரில் வசிக்கும் மக்களின் பசிப்பிணி ஆற்ற மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் மூலம் இலவச உணவு வழங்கிவரும் தேஜிந்தர் பால் சிங் என்பவர் டார்வின் நகர ‘லோக்கல் ஹீரோ’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தொடர்ந்து நான்காவது ஆண்டாக இவருக்கு இந்த சிறப்பு விருது அளிக்கப்படுவது, குறிப்பிடத்தக்கது.

5174876832



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106