மும்பை இந்தியன்ஸ் அணியில் மாலிங்க மற்றும் மஹேல!
Saturday, January 28th, 2017
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகர் முகேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
குறித்த செய்தியானது குறிப்பாக இலங்கை ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்த விடயமாகவே உள்ளது. ஏனெனில் லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையினால் புறக்கணிக்கப்படும் ஒரு வீரராக அண்மைய காலங்களில் கருதப்படுகின்றமை விசேடமானது.
இந்த வகையில் லசித் மலிங்காவிற்கு மட்டும் அம்பானி விமானத்தினை அனுப்பவில்லை, மஹேல ஜெயவர்த்தனவிற்கும் விசேட அழைப்பாணையினை விடுத்துள்ளார்.
இந்த வருடம் இடம்பெறும் IPL போட்டிக்கு இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை பெருமைப்படும் விடயம் என்றாலும், இதில் மஹேல எதற்காக என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுகின்றது.
குறிப்பாக லசித் மலிங்கா விசேட பந்து வீச்சாளருக்காகவும், மஹேல ஜெயவர்த்தன மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றவுள்ளார், என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106