இந்தியா– இங்கிலாந்து டி20 போட்டி இன்று ஆரம்பம்!
Thursday, January 26th, 2017
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 20 ஓவர் போட்டிகள் பற்றி சில கண்ணோட்டங்களை பார்ப்போம்.
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் முதல் முறையாக 2007-ல் மோதின. தென்ஆபிரிக்காவில் நடந்த உலககிண்ணத்தில் இந்தியா 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், இங்கிலாந்து 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய அணி 2007-ல் டர்பன் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் குவித்ததே இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். அந்த அணி அதிகபட்சமாக 6 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
விராட் கோலி 6 ஆட்டத்தில் 184 ஓட்டங்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் 176 ஒட்டங்கள் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். அவர் 71 ஓட்டங்கள் எடுத்ததே தனிப்பட்ட வீரரின் அதிகபட்சமானது. ஹர்பஜன்சிங் அதிக பட்சமாக 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். டென்பெஞ்ச் 7 விக்கெட் எடுத்துள்ளார்.
ஹர்பஜன் 12 ஒட்டங்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106