அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் :செரீனா வில்லியம்ஸ் அரையிறுதியில்!

Thursday, January 26th, 2017

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-–2, 6-–3 என்ற நேர்செட் கணக்கில் ஜோகன்னா கோன்டாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

கிராண்ட்சலம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) நேற்று நடந்த கால்இறுதியில் 9-ம் நிலை வீராங்கனை ஜோகன்னா கோன்டாவை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.

இதில் செரீனா வில்லியம்ஸ் 6-–2, 6-–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

அவர் அவுஸ்திரேலிய பகிரங்க போட்டியில் 8-வது தடவையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

மற்றொரு கால்இறுதியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிலிஸ்கோவா (செக்குடிரசு) அதிர்ச்சிகரமாக தோற்றார். தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கும் குரோஷியாவை சேர்ந்த லுசிக் பரோனி 6-–4, 3-–6, 6-–4 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல் முறையாக கிராண்ட்சலம் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு அவர் 4-வது சுற்று வரை நுழைந்து இருந்ததே சிறப்பானதா கும்.

பெண்கள் அரைஇறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. ஒரு அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)- வான்ட்வெக் (அமெரிக்கா) மோதுகிறார்கள். 2-வது அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- லுசிக் பரோனி (குரோஷியா) மோதுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் 9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்)- மூன்றாம் நிலை வீரரான ரோனிக் (கனடா) மோதுகிறார்கள்.

இந்த ஆட்டம் நடாலுக்கு கடும் சவாலாக இருக்கும்.

மற்றொரு கால்இறுதியில் 11-ம் நிலை வீரர் டேவிட் கோபின் (பெல்ஜியம்)- டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள்.

4-ம் நிலை வீரரான, வாவ்ரிங்கா, 17-வது வரிசையில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.

1973551949SERENA-WILLIAMS



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106