ATM கொள்ளையிட்ட ரூ 50 இலட்சத்துடன் நால்வர் கைது!

Thursday, January 26th, 2017

பிபிலை, மெதகம நகரில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையுடன் தொடர்புட்ட சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.குறித்த நபர்கள் நால்வரிடமிருந்தும் சமமாக பங்கிடப்பட்ட ரூபா 50 இலட்சம் பணம் மற்றும் ATM இயந்திரத்தை உடைப்பதற்காக பயன்படுத்திய வாயு சிலிண்டர் இரண்டு, கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட கார், கருவிகள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று (25) மெதகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று மினுவங்கொடை, பலாங்கொடை, ஆணமடுவ மற்றும் வெலிமட விரகவத்தை ஆகிய பகுதிகளில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மெதகம நகரிலுள்ள இலங்கை வங்கிக் கிளை, அதன் முகாமையாளர் எ.டி.எஸ். பெனாண்டோ மற்றும் சில ஊழியர்களால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) சுத்தம் செய்யும் பணிக்காக திறக்கப்பட்டபோது, குறித்த வங்கியின் பணம் மீளப்பெறும் இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து மெதகம பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்று மூன்று நாட்களின் பின்னர், மெதகம பொலிஸாரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.

atm-



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106