இலங்கையுடனான  ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்க அணி அறிவிப்பு!

Wednesday, January 25th, 2017

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்குமான தென்னாபிரிக்க அணியில் இருபது வயது வேகப்பந்து வீச்சாளர் லுன்கி நிகிடி தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார். இவர் தனது முதல் இரு டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

காயம் காரணமாக கடந்த ஆண்டு ஜுன் தொடக்கம் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஏ.பி டிவிலியர்ஸ் அணிக்கு திரும்புகிறார். காயம் காரணமாக அண்மையில் நடந்து முடிந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடாத கிறிஸ் மொரிஸும் அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டைன் மற்றும் மோர்னி மோர்கல் பெயர்கள் ஒருநாள் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணி விபரம் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விபரம்: ஏ.பி டிவிலியர்ஸ், ஹாஷிம் அம்லா, பர்ஹான் பஹர்தீன், குவின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), ஜே.பி டுமினி, பாப் டி பிலசிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், கிறிஸ் மொரிஸ், வெயின் பார்னல், லன்கி நிகிடி, அன்டிலே பெஹ்லுக்வாயோ, ட்வாய்ன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, டப்ராய்ஸ் ஷம்சி.

sdasff1-300x185



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106