அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு நடால், செரீனா தகுதி!

Wednesday, January 25th, 2017

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், கனடாவின் மிலோஸ் ரயோனிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால் 3 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் 6–3 , 6–3, 4–6, 6–4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் கேல் மான்பில்ஸை தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய ஓபனில் 9ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் நடால், அது குறித்துப் பேசுகையில், “சில ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கு காலிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

2015 பிரெஞ்ச் ஓபனுக்குப் பின்னர் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் நடால், அடுத்ததாக கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை சந்திக்கிறார்.

முன்னதாக ரயோனிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் ரொபர்ட்டோ பெளதிஸ்டா அகட்டை தோற்கடித்தார்.

நடாலும், ரயோனிச்சும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் நடால் 6 முறையும், ரயோனிச் 2 முறையும் வெற்றி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7–5, 6–4 என்ற நேர் செட்களில் செக். குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். செரீனா தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவை சந்திக்கிறார். முன்னதாக கோன்டா 6–1, 6–4 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எக்டெரினா மகரோவாவை வீழ்த்தினார்.

இதேபோன்று குரோஷியாவின் லுௗசிச் பரோனி 6–4, 6–2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியையும், செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6–3, 6–3 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் டேரியா கேவ்ரில்லோவையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்

coltkn-01-25-fr-07162421017_5175957_24012017_MSS_CMY



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106