இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி!
Monday, January 23rd, 2017
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றறுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பாடி 19.3 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அறிமுகவீரரான சந்தகன் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் உதான 2.3 ஓவர்களில் 13 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கட்டுகளை பெற்றுக்கொண்டனர்.
115 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரம்ப முதலே ஆட்டம் காண வைத்தனர்.நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மெத்தியூஸ் 50 பந்துகளில் 54 ஓட்டங்கள் பெற்று இலங்கை அணியினை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
போட்டியின் ஆட்டநாயனாக மெத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.மூன்று இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என இலங்கை அணி சமநிலை செய்துள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106