மத்தியவங்கி பிணை முறி மோசடி விவகாரம்: நாடாளுமன்றில் விவாதம்!
Monday, January 23rd, 2017
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கோப் குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் குறித்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.அத்துடன், நாளை காலை 9.30 முதல் இரவு 7.30 மணி வரையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வெளிநாடு செல்ல மாகாணசபை உறுப்பினர்கள் அனுமதி பெற வேண்டும்!
மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்படவுள்ளதால் மாணவர்களுக்குப் போசாக்கு உணவை வழங்க பெரும் சிக்கல்களை எதிர்...
இலங்கை - உக்ரேன் அரசாங்கங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஆணையகம்!
|
|
|


