நாவற்குழி பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைக்கு தீர்வு!  

Monday, January 23rd, 2017

நீண்டகாலமாக நாவற்குழி பகுதி விவசாயிகள்,கடற்றொழிலாளிகள் எதிர்கொண்டுவந்த உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக எதிர்கொண்டுவந்த பிரச்சினைக்கு கிராமிய பொதுச் சந்தை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டதன் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தமது பகுதியில் ஒரு வியாபார மையம் இன்மையால் தாம் சாவகச்சேரி சந்தையை நாடிச்செல்லவேண்டியுள்ளதால் தமது பகுதியில் ஒரு சந்தையை அமைத்து தருமாறு பலதரப்பட்டவர்களிடமும் குறித்த பகுதி மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக சந்தை தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு நேற்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு மக்களது பாவனைக்கும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, கட்சியின் பிரதேச நிர்வாகச் செயலாளர் மெடிஸ்கோ  மற்றும் குறித்த பகுதி  மக்கள்  வியாபாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

unnamed

unnamed (2)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106