26 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் காணமற்போனதாக நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்ட உறவினர்!
Saturday, January 21st, 2017
1988 – 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் போது காணமற்போனதாகக் கூறப்படும் பெண் ஒருவர் சுமார்ர்.
தற்போது 43 வயதாகும் குறித்த யுவதிக்கு, அப்போது (காணாமற்போன போது) 18 வயதாகும். மேலும் காணமற்போனவர்களுக்காக வழங்கப்பட்ட நட்ட ஈட்டையும் அந்த யுவதியின் உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தனக்கு 18 வயதாக இருந்த போது திருமணம் முடித்து தொகோமட பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு சென்று 2 மாதங்களிலேயே கண்களைக் கட்டியபடி வந்த சிலர் தனது கணவரை இருத்துச் சென்றதாகவும் கூறும் யுவதி பின்னர் தேயிலைத் தோட்டத்தில் வைத்து தனது கணவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சுமைகளை மனதில் சுமந்தபடி கணவரின் இறுதிக் கிரிகைகளை நிறைவு செய்த அவர் மீண்டும் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அந்தப் பெண் தனது வாழ்க்கiயில் நடந்தமை தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
நான் வீட்டுக்கு வந்து 2,3 நாட்களில் கணவரின் பெரியம்மாவின் மகள் ஒருவர் என்னை நாவலப்பிட்டியிலுள்ள அவர்களது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது பெரும் உழைச்சலில் இருந்த நானும் அங்கு சென்றேன். ஆனால் அவர்கள் என்னை விஹாரமாதேவி பூங்காவைப் பார்க்க கொழும்பு செல்வோம் என்று அழைத்தனர். நானும் அவர்களுடன் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை கொழும்பு அழைத்துச் சென்று வீடொன்றில் ஒப்படைத்தனர். அவர்கள் என்னை அடைத்து வேலை வாங்க ஆரம்பித்தனர். 26 வருடங்கள் எனக்கு சுதந்திரம் இல்லை. அதிகாலை 5 மணிக்கு எழுந்து வேலைகளைச் செய்ய வேண்டும். அந்த வீட்டுக்குச் செல்லும்போர் இரு பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவியுடன் இருந்தனர்.
சிறு பிள்ளைக்கு 3 மாதங்களே, நான் பிள்ளைகளை பராமரித்ததோடு வீட்டு வேலைகளையும் செய்தேன். இவ்வாறு சில வருடங்கள் கழிந்த பின்னர் எனது தந்தை இறந்து விட்டதாக அவர்கள் பேசிக்கொண்டனர். நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றேன். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எனக்கு 13 சகோதர, சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கடற்படையில் இருந்தார். அவர் இறந்துள்ளார். மற்றைய சகோதரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். நான் இவர்கள் பேசியவற்றில் இருந்து இதனை அறிந்து கொண்டேன். ஆனால் என்னை எதற்கும் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. என்றார்.
சுமார் 26 வருடங்களில் பின்னர் இந்தப் பெண் கடந்த 17ஆம் திகதி மீண்டும் கம்பளை – கிராஉல்ல பகுதியிலுள்ள அவரத வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னை அழைத்து வைத்திருந்து தெல்கந்தை மற்றம் கொட்டாவ பகுதியிலுள்ள வீட்டில் எனவும், தன்னை பலவந்தமாக அடைத்து வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பெண் நாவலப்பிட்டி பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106