வரட்சி நீங்கும் வரைதேவையற்ற மின்விளக்குகள் வேண்டாம் – ஜனாதிபதி!

Saturday, January 21st, 2017

நாடு தற்போது முகம்கொடுத்துள்ள வரட்சியை கருத்ததிற்கொண்டு, சந்தைப்படுத்தல் மற்றும் அலங்கார நோக்கத்துடன் ஒளிர விடப்பட்டுள்ள மின் விளக்குகள், மின் திரைகளை அணைத்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு தனியார் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்வரும் நாட்களில் முகம் கொடுக்க நேரிடும் மின்சார நெருக்கடியை தவிர்ந்துகொள்ளலாம் எனவும், இது அனைவரதும் பொறுப்பு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், மின்விளக்குகள் மற்றும் இலத்திரனியல் திரை கொண்ட விளம்பர பலகைகளை பயன்படுத்துவதனால், இரவு நேரங்களில் அதிகளவு மின்சார விரயம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.எனவே, இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, வரட்சி நீங்கும் வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

Maithiri1



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106