அழிந்து வரும் பூச்சி இனத்துக்கு அமெரிக்கா ஜனாதிபதியின் பெயர்!
Friday, January 20th, 2017
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அழிந்து வரும் பூச்சி இனம் ஒன்றுக்கு அவரின் பெயரை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி போல அதற்கும் இருப்பதால் அதே பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த புதிய வகைப் பூச்சியின் தலையில் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் செதில்கள் உள்ளன.
ஒட்டாவாவைச் சேர்ந்த பரிணாம உயிரியில் விஞ்ஞானி வாஸ்ரிக் நஸாரி இந்த செதில்களைப் பார்த்ததும் ட்ரம்பின் தலைமுடியைப் போல் இருப்பதை உணர்ந்து குறித்த பூச்சி இனத்துக்கு நியோபால்பா டொனால்ட்ரம்பி என பெயரை வைத்துள்ளார்.
“புதிய பெயரால் பூச்சிக்கு கிடைக்கும் வெளிச்சம், மேற்கொண்டு இந்த பூச்சி இருக்கும் இடங்களை பாதுகாக்க வழிவகுக்கும் என்றும், மேலும் இதுநாள் வரை கவனிக்கப்படாமல் இருந்த தென் அமெரிக்காவின் பல்லுயிர்கள் மீதும் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொஹார்ட் பூச்சியியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டேவிஸிடமிருந்து பெற்ற சில மாதிரிகளை வைத்து பார்க்கும்போது தான் இதுவரை பார்த்திராத, இதற்கு முன் கண்டிராத மாதிரிகள் அவை என்பதை நஸாரி உணர்ந்துள்ளார்.
இந்த பூச்சி வகைகளையும், மற்ற ஆராய்ச்சி கூடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வகைகளையும் ஆராய்ந்த பின்னர், புதிய வகை பூச்சி இனைத்தை கண்டுபிடித்துள்ளதை விஞ்ஞானிகள் உறுதிசெய்தனர்.
இதேவேளை, சமீபத்தில் ஒரு புதிய வகை மீன் இனத்துக்கு பராக் ஒபாமாவின் பெயர் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106