ஐ.பி.எல் போட்டிக்கு மறுப்பு சொன்ன ஜோ ரூட்!
Friday, January 20th, 2017
வெளிநாடுகளில் அதிக போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதால் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முடியாது போகும் நிலை உள்ளதால் இங்கிலாந்து அணியின் ரன் மிஷின் என அழைக்கப்படும் ஜோ ரூட் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுப்புத் தெரிவித்துள்ளார்..
ஜோ ரூட் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. அவரை இந்த சீசனில் விளையாட வைக்க பல அணிகள் அணுகின, ஆனால் அவர் மறுத்து விட்டார். இது குறித்து ஜோ ரூட் கூறுகையில், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதன் மூலம் மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கும். ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த ஆண்டு தொடர்ச்சியாக நிறைய சர்வதேச போட்டிகள் வெளிநாட்டில் விளையாட வேண்டி உள்ளது. இதனால் குடும்பத்தை விட்டு நீண்ட காலம் பிரிந்து இருக்கும் நிலை ஏற்படும். எனவே ஐபிஎல் போட்டி நடக்கும் சமயத்தில் கிடைக்கும் நேரத்தை எனது குடும்பத்தின் புதிய வரவான மகன் ஆல்பிரட்டுடன் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106