“பக்குரு வலைகளுக்கு” வருகிறது தடை!
Thursday, January 19th, 2017
இயந்திரப் படகுகளில் கட்டிப் பயன்படுத்தப்படும் பக்குரு வலைகளை, இந்தியா தடை செய்தள்ளதால் அந்நாட்டு மீனவர்கள் இங்கு வந்து அந்த வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன, தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (18) இடம்பெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்
“இலங்கைக் கடற்பரப்பினுள் இயந்திரப் படகுகளினால் கட்டி இழுக்கப்பட்ட பக்குரு வலைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மீன்பிடிச் செயற்பாடுகளுக்குத் தடைவிதிப்பதற்குத் தேவையான விதப்புரைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக, கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கிகாரத்தினைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக அமைச்சரவை யோசனைப் பத்திரத்தை மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்திருந்தார்.
நான், மீன்பிடி அமைச்சராக இருந்த போது, இலங்கை மீனவர்களும் அந்த மீன்பிடி நடவடிக்கையில் முன்னர் ஈடுபட்டனர். அதனை நாம் தடுத்தோம் இந்திய மீனவர்களைக் கைதுசெய்தாலும் அதில் குறைவு ஏற்படவில்லை. அதனையடுத்து 82 படகுகளையும் கைப்பற்றினோம். இப்போது இந்நடவடிக்கை குறைந்தாலும் பின்னர் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இந்த மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக தடைவிதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டு அரசாங்கமும் எமக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. இந்தியாவுடன் நல்லிணக்கம் உள்ளதால் இதனை பேசித் தீர்த்துக்கொள்வோம்” என்றார்

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106