நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதி மக்களது வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
Wednesday, January 18th, 2017
நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதி மக்கள் நீண்டகாலமாக தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளை பூர்த்தி செய்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கிலியன் தோப்பு 5 ஆம் வட்டாரம் பகுதியில் வாழும் மக்களது வேண்டுதலுக்கிணங்க கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் மக்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது குறித்த பகுதியில் வாழும் மக்கள் தமது அடிப்படை தேவைகளான வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு இரவிந்திரதாசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களது கோரிக்கையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக குறித்த பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக குழு உறுப்பினர் தயாழினி உடனிருந்தனர்.



|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106