அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்  : ஷிமோனா ஹெலப் அதிர்ச்சி தோல்வி!

Wednesday, January 18th, 2017

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஷிமோனா ஹெலப் 3-−6, 1-−6 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்துள்ளார்.

கிராண்ட்சலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.

தொடக்க நாளிலே முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஷிமோனா ஹெலப் அதிர்ச்சிகரமாக வெளியேறினார். உலகின் 4-ம் நிலை வீராங்கனையான அவர் முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஷெல்பி ரோஜர்சை எதிர்கொண்டார்.

இதில் ஹெலப் 3-−6, 1-−6 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 7-ம் நிலை வீராங்கனையான கார்பன் முகுருஜா (ஸ்பெயின்) முதல் சுற்றில் 7-−5, 6-−4 என்ற கணக்கில் மரினாவை (நியூசிலாந்து) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-−6, (7-−5), 7-−5 என்ற நேர்செட் கணக்கில் கேத்ரினாவை (உக்ரைன்) வீழ்த்தினார்.

உலகின் 5-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 5-−7, 6-−1, 6-4, 6-−7 (6-−8), 6-−2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குஸ்னெட் கோவை (ரஷ்யா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 10-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), டொமினிக் (அவுஸ்திரேலியா) ஆகியோர் வென்றனர்.

12col345143926412_5152653_16012017_AFF_CMY



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106