அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் நீக்கம்!

Wednesday, January 18th, 2017

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மெல்போர்னில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய சகலதுறைவீரர் மிட்செல் மார்ஷ் தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

இதனால் தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்தது. அவருக்கு பதிலாக சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது.

கழுத்தில் காயத்தால் அவதிப்படும் அவுஸ்திரேலிய அதிரடி துடுப்பாட்டவீரர் கிறிஸ் லின் இந்த ஆட்டத்தில் மட்டும் விளையாடமாட்டார். இதை கருத்தில் கொண்டு பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஏற்கனவே அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

78col140954028_5157199_17012017_AFF_CMY



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106