இந்தியா- சீனா இடையே அமைதி வழியில் எல்லை ஒப்பந்தம்
Thursday, April 21st, 2016
இந்தியா-சீனா இடையே இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய , பரஸ்பரம், அமைதியான முறையில் எல்லை பிரச்சினையை தீர்த்துக்கொள்வது என தீர்மானிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய-சீன இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை தீர்ந்தபாடில்லை. இது தொடர்பாக இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் இடையே இதுவரை 18 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. நிரந்தர தீர்வு எட்டப்பட வில்லை. அவ்வப்போது சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி முகாம்கள் அமைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ,
இந்நிலையில் இந்திய-சீன எல்லை பிரச்னை குறித்த 19-வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடக்க உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யங் ஜெய்ச்சியை சந்தித்து பேசினார். அப்போது எல்லை பிரச்னைக்கு பரஸ்பரம், அமைதியான முறையில் தீர்வு காண்பது, இரு நாடுகள் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது , பாகிஸ்தான் பயங்கரவாதியான மசூத் அசார் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|
|


