டெஸ்டில் இருந்து ஓய்வு பெறவில்லை.. டிவில்லியர்ஸ் !

Wednesday, January 18th, 2017

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று அறிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ் காயம் காரணமாக கடந்த யூன் மாதத்திற்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.இந்த நிலையில் அவர் விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவது பற்றி அவர் கூறுகையில், டெஸ்ட் போட்டிகளுக்கு எப்போது திரும்புவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை.இன்னும் உலகக்கிண்ணத்தை நாங்கள் வெல்லவில்லை. எனவே 2019ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு 2019 உலகக்கிண்ணம் தான் முக்கியமாகத் தெரிகிறது. அதை வெல்வதை நாங்கள் உறுதி செய்யவேண்டும்.நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளேன். ஆனால் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன். ஆனால் நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என்று கூறியுள்ளார்.

devilliers_2675196f



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106