இ.போ.ச பேருந்து வண்டிகளின் எண்ணிக்கை இவ்வருடத்திற்குள் அதிகரிக்கப்படும் போக்குவரத்து பிரதியமைச்சர்!
Tuesday, January 17th, 2017
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்து வண்டிகளின் எண்ணிக்கையை இந்த வருடத்திற்குள் 7250 வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளபோவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசசேவைகள் பிரதியமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
இந்த வருடத்திற்குள் இரண்டு கதவுகள் அடங்கிய 1000 பேருந்து வண்டிகளும் தனிக் கதவுகள் அடங்கிய 250 பேருந்து வண்டிகளும் புதிதாக இறக்குமதி செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தற்போது 5,500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. புதிதாக 12 ரயில் இஞ்சின்களும் 6 ரயில் இயந்திரத் தொகுதிகளும் 160ரயில் பெட்டிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளன. தற்போது 25லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். சுமார் 75லட்சம் மக்கள் தனியார் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ரயில்களில் நாளாந்தம் 5லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்தப் பயணிகளின் வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது அரசின் நோக்கம் என்றார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106