ஹபீஸ் அதிரடி: அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
Monday, January 16th, 2017
அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் இரண்டாம் ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கட்டுகளால் வெற்றியடைந்துள்ளது.
221 வெற்றி அலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் 47.4 ஓவர்களில் 4 விக்கட் இழப்புக்கு 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணிக்காக ஹபீஸ் 104 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 72 ஓட்டங்களையும், சுஹைப் மலிக் 52 பந்துகளில் ஒரு 6 ஓட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்களாக 42 ஓட்டங்களையும், பாபர் அஸாம் 49 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றியடைய செய்தனர்.
அவுஸ்திரேலியா அணி சார்பாக ஜேம்ஸ் பால்க்னர் 9 ஓவர்கள் பந்து வீசி 35 ஓட்டங்களை வழங்கி 2 விக்கட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்கள் பந்து வீசி 45 ஓட்டங்களை வழங்கி 2 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டாம் ஒருநாள் ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக ஹபீஸ் தெரிவு செய்யப்பட்டார்.இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 1-1 என சமன் செய்துள்ளது.
அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி ஜனவரி 19ஆம் திகதி, பெர்த் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஐந்து போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 1:1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106