நிரந்தர தீர்வுகளை வென்றெடுத்துத்தரும் வல்லமை கொண்ட தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!
Sunday, January 15th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினதும் கரங்களுக்கு தமிழ் மக்களது அதிகரித்த அரசியல் பலம் கிடைக்கப்பெறும்போதுதான் எமது இனத்தின் வாழ்வியலுக்கும் உரிமைசார் பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளை வென்றெடுத்துக்கொள்ள முடியும். அதற்கான காலம் தற்போது உருவாகியுள்ளது. அதனை இறுகப் பற்றிக்கொள்வதற்காக அனைவரும் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்க்க அணிதிரளுங்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) அழைப்பு விடுத்துள்ளார்.
சாந்தை விநாயகர் விளையாட்டுக்கழகம் மற்றும் சாந்தை விநாயகர் சனசமூக நிலையம் ஆகியன இணைந்து தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடத்திய கிளித்தட்டு விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த கால யுத்தங்களால் இன்றுவரை எமது மக்கள் அனுபவித்து வரும் தீர்வு காணாத துயரங்களுக்கு காரணம் சுயநல அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அவர்களை ஒத்த போலி தேசியம் பேசுபவர்களும்தான் என்பதை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த மாற்றம் இனிவருங் காலத்தில் தமிழ் மக்களுக்கான விடியலை தேடித்தரும் மாற்றமாக அமையவெண்டும் என்பதே எமது விருப்பாகும். அந்த மாற்றத்தினூடான தமிழ் மக்களது அரசியல் பலம் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினது கரங்களுக்கு மேலும் அதிகரித்து கிடைக்கப்பெறுமானால் நிச்சயம் எமத இனம் கண்டுவரும் மாறா வடுக்களுக்கு நிரந்தர பரிகாரங்களையும் உரிமையுடன் கூடிய வாழ்வியலையும் அவர் வென்றெடுத்து தருவார் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கட்சியின் மானிப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் (ஜீவா) கட்சியின் மானிப்பாய் பிரதேச உதவி நிர்வாக செயலாளர் குலம் அகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.



|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106