நிபந்னையின்றியே கிடைக்கப்பெற்றது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை – நிதி அமைச்சர்!
Saturday, January 14th, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் நிபந்தனையின்றியே இலங்கைக்கு மீளவும் கிடைக்கப் பெற்றது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் அடிபணியாது வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு வழங்குவது குறித்து விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர், உத்தியோகபூர்வமாக இந்த சலுகைத்திட்டம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த சலுகைத் திட்டம் ஊடாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் வரிச் சலுகைகள் கிடைக்கப்பெற உள்ளது.இதன் ஊடான பொருளாதார நலன்கள் பற்றி அறிந்து கொள்ளாதவர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் 11 வீதமான வரிச்சலுகை கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106