மனைவியை கொலை செய்த இலங்கையரக்கு குவைத்தில் மரணத்தண்டனை!
Saturday, January 14th, 2017
குவைத்தின் சல்மிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் கணவன் மனைவி இடையே இருந்த பகை காரணமாக மனைவியை திட்டமிட்டு கணவர் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவன் மனைவி இடையே இருந்த சண்டை காரணமாக வீட்டில் இருந்த சிலிண்டரின் குழையினை குறித்த நபர் சிறிய அளவில் துளையிட்டு வைத்துள்ளார். இதில் கேஸ் வாயு அறை முழுவதும் பரவியது. இதையடுத்து பெண் சமையல் செய்ய தீ பற்றவைக்கும் போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடியிருப்பு முழுவதும் தீக்கிரையானது..
இதில் மனைவி உட்பட இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். இதை மறைத்து கணவன் தன்னுடைய உடலிலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
முதலில் சாதாரணமாக விபத்து என்றே கருதப்பட்டது. ஆனால் அந்த காயங்களை பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் வர தீவிர விசாரணை செய்தனர். இதில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து இது பற்றி விசாரணைகளை மேற்கொண்ட அந்நாட்டு நீதிமன்றம் நேற்று மரணத்தண்டனை விதித்துள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106