நிவாரண நடவடிக்கைகளுக்கு படையினர் இணைத்துக் கொள்ளப்படுவர் – ஜனாதிபதி!
Saturday, January 14th, 2017
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு முப்படையினரின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மேலதிகமாக படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
திருகோணமலை சீன துறைமுக கடற்படை முகாமில் இன்று இடம்பெற்ற புதிதாக இணைந்து கொண்டுள்ள வீரர்களை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முறையான வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்காக முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், நாட்டின் முப்படைத் தளபதி என்ற வகையில் அதனை தான் மதிப்பதாகவும் கூறினார். அத்துடன் முப்படையினர் தொடர்பில் தான் மிகவும் நம்பிக்கையுடன் செயற்படுவதாகவும் கூறினார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106