யாழ்.கோப்பாய் மதவடிப்பகுதியில் விபத்து: இரண்டு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயம் !

Thursday, January 12th, 2017
யாழ்.கோப்பாய் மதவடிப்பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(11) முற்பகல்-11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் கோப்பாய் குமரபுரத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட மூவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த  விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் குமரபுரத்தைச் சேர்ந்த  மூவரும் கைதடி நோக்கி சிறியரக மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்த வேளை கோப்பாய் மதவடி வீதியை அண்மித்த வேளை பின்புறமாக வந்த படிரக வாகனம் இவர்களை மோதித் தள்ளி விட்டுச் சென்றுள்ளது . சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த 25 வயதுப் பெண், மற்றும் அவரது இரண்டு வயதுக் குழந்தை மற்றும் சகோதரன்  ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள்  யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1452316277-8563


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106