காக்கைதீவில் களவாக கழிவுகள் கொட்ட முயற்சி: உழவு இயந்திரத்துடன் சாரதி கைது!

Thursday, January 12th, 2017

உணவுக் கழிவுகளை ஏற்றி வந்து திருட்டுத்தனமாக காக்கைத்தீவு பகுதியில் கொட்ட முயன்ற யாழ்.நகரின் மத்தியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின்  உழவு இயந்திரம், மாநகர காவல் பிரிவால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உழவு இயந்திரத்தின் சாரதியைக் கைது செய்த பொலிஸார் உழவு இயந்திரத்தையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

காக்கைதீவுப் பகுதியில் கழிவுகளைக் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. சில தனியார் இரவு வேளைகளில் திருட்டுத்தனமாக கழிவுகளை கொட்டுவது அவதானிக்கப்பட்டது. கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சாரதி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

dav
dav


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106