இந்திய தொடருக்காக பிக் பாஷ் தொடரிலிருந்து விலகும் ஓ கீபே!
Wednesday, January 11th, 2017
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளவுள்ள நிலையில், இத்தொடருக்காக நடைபெற்றுவரும் பிக் பாஷ் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீபன் ஓ கீபே விலகியுள்ளார்.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை, ஸ்டீபன் ஓ கீபேவை ‘பிக் பாஷ் தொடரில் இருந்து வெளியேற்றுமாறும், அவர் இந்திய தொடருக்காக சிகப்பு பந்தில் அதிக அளவு பயிற்சி மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆடுகளங்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைவதால் அவுஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கின்றது. இதனால், நாதன் லயன் மற்றும் ஸ்டீபன் ஓ கீபே ஆகியோரை முக்கிய துருப்புச் சீட்டாக பயன்படுத்த இருக்கிறது.
இதனால் பிக் பாஷ் தொடரில் இருந்து விலகியுள்ள ஸ்டீபன் ஓகீபே, டுபாய் செல்லும் முதல் வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் 23ஆம் திகதி புனேவில் ஆரம்பமாகின்றது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106